search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வு தேதி அறிவிப்பு"

    சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. #CBSE #ExamDate
    சென்னை:

    மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று அதிகாரப்பூர்வமாக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டுத் தேர்வுகள் பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்குகிறது. 

    இதன்படி, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி முடிகின்றன. சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. #CBSE #ExamDate
    தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1199 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு நவம்பர் 11-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்இ அறிவித்துள்ளது. #TNPSC #TNPSCGroup2 #Group2Exam
    சென்னை:

    தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிக்கையை டின்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.



    இந்த தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு செப்டம்பர் 11-ம் தேதி கடைசி நாள் ஆகும். நவம்பர் 11-ம் தேர்வு நடைபெறும்.

    எந்தெந்த பணியிடங்களுக்கு எத்தனை காலியிடங்கள், தேர்வுக்கான பாடத்திட்டம், வயது வரம்பு உள்ளிட்ட பிற தகவல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (tnpsc.gov.in) அறிந்துகொள்ளலாம். #TNPSC #TNPSCGroup2 #Group2Exam
    ×